சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் முருகனை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், “நாளை பாஜகவில் இணைய இருக்கிறேன். எனது தந்தை சிவாஜி கணேசன் காங்கிரசில் இருந்தாலும், நான் மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணையவுள்ளேன்” என்றார்.
நடிகர் பிரபுவும் பாஜகவில் இணையும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த ராம்குமார், அவர் நடிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்றார்.