சென்னை:நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
"பராசக்தி ஹீரோ" - சிவாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் - sivaji birthday
கலை உள்ள வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்புகழ் இம்மண்ணில் நிலைத்து நிற்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலை உள்ள வரை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் நிலைத்து நிற்கும்- ஸ்டாலின்
அதன்பி முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பராசக்தி ஹீரோ. கலைஞரின் உயிரனைய நண்பர். பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் 'சிவாஜி' என்ற பட்டம் பெற்று, வரலாற்றில் நிலைத்துள்ளவர். கலை உள்ள வரை நடிகர் திலகத்தின் புகழ் இம்மண்ணில் நிலைத்து நிற்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் : விருது பெற்றார் சூர்யா..!