தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீண்டும் மாநில அரசின் பணிக்கு திரும்பும் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் - Shiv das meena IAS

தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ் மாநில அரசுக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் மாநில அரசின் பணிக்கு திரும்பும் சிவ் தாஸ் மீனா  ஐஏஎஸ்
மீண்டும் மாநில அரசின் பணிக்கு திரும்பும் சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்

By

Published : May 27, 2021, 7:06 PM IST

Updated : May 27, 2021, 7:21 PM IST

ஐஏஎஸ் அலுவலர் சிவ் தாஸ் மீனா மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தமிழ்நாட்டின் அடுத்த உள்துறை செயலாளராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு, சிவ் தாஸ் மீனா ஐஏஎஸ்-ஐ மத்திய அரசு பணியில் இருந்து விடுவித்து மாநில அரசுக்கு பணியிடை மாற்றம் செய்துள்ளது.

யார் இந்த சிவதாஸ் மீனா ஐஏஎஸ்?

சிவதாஸ் மீனா ஐஏஎஸ் 1998 ஏப்ரல் 25ஆம் தேதி முதல் 2001 ஜூன் 10ஆம் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். அந்த காலத்தில் திறம்பட செயலாற்றி மக்களின் ஆட்சியராகத் திகழ்ந்தவர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிச்செயலர்களில் ஒருவர் இவராவார்.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பதவியேற்ற பின் இவர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

Last Updated : May 27, 2021, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details