சென்னை:கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது மனைவி வீட்டிற்கு தனியாக நடந்து வரும்போது இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இதனிடையே அண்ணா நகரில் பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடும் போது அண்ணா நகர் காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(18) என்பதும், இவர் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்து விட்டு எழும்பூரில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் பணியாளராக இருந்து வருவதும் தெரியவந்தது.
குறிப்பாக வில்லிவாக்கத்தில் இருந்து தனது இரு சக்கர வாகனம் மூலம் பணிக்கு செல்லும் போதும், வரும் போதும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் மற்றும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து காலி இடத்தில் வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் செல்வதை தினேஷ்குமார் வாடிக்கையாக வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட தினேஷ் குமாரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:பாஜக கொடுத்த அழுத்தத்தால்தான் கோயில்கள் திறப்பா? - சேகர்பாபு பதில்