சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கத்தியை காட்டி உறவினர்கள் முன்னிலையில் மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்ததையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி லிங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால், ரவுடி லிங்கம் கைது செய்யப்படவில்லை என மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டதாக நாளிதழில் செய்தி வெளியானது.
பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்யாதது ஏன்? நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இது குறித்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மூன்று வாரங்களில் விரிவான பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கறுப்பர் கூட்டம் வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை!