சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த கோகுலகண்ணன் என்பவர் 2015ஆம் ஆண்டு, அதேப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் இணைப்பு கொடுப்பது போல சென்று, 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தார்.
இதன்காரணமாக கருவுற்ற சிறுமியைத் திருமணம் செய்து கொண்டு, அவரின் விருப்பத்துக்கு மாறாக கருவைக் கலைத்துள்ளார்.
இதையடுத்து சிறுமியை தனது வீட்டில் இருந்து விரட்டியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர், கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில், கோகுலகண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, கோகுலகண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பெண்கள் விடுதிக்குள் இளம்பெண் பாலியல் வன்புணர்வு... மைசூரில் கொடூரம்!