தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ராஜகோபாலனிடம் துருவி துருவி விசாரணை; வெளியான 'zoom' சேட்டைகள் - ராஜகோபாலனின் ஆன்லைன் வகுப்பு

பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்லைன் வகுப்புகளின் போது அவர் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்தது போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜகோபாலன் வாக்குமூலம், ராஜகோபாலன், பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர்
sexual allegations teacher rajagopalan statement in Police custody

By

Published : Jun 4, 2021, 8:01 AM IST

Updated : Jun 4, 2021, 8:22 AM IST

சென்னை: கேகே நகர் பத்மசேஷாத்ரி பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது ராஜகோபாலனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் அனுமதி பெற்றனர்.

இதில் ராஜகோபாலனிடம் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டு காவல் துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக, ஐந்து மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகளை தயாரித்து அதற்கு பதில் அளிக்கும்படி ராஜகோபாலனிடம் காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

ஏன்..? ஏன்..? ஏன்..?

சுமார் 250 கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி காவலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பள்ளி நிர்வாகத்திற்கு இந்த விவகாரம் தெரிந்தே நடந்ததா..? மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்?.. அரைகுறை ஆடையோடு ஆன்லைன் வகுப்பு ஏன் நடத்துனீர்கள்?.. மாணவிகளுக்கு சினிமா ஆசைக்காட்டி என்ன மாதிரியான மோசடிகளில் ஈடுபட்டீர்கள்?.. எந்தெந்த ஆசிரியருடன் சேர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தீர்கள்?.. என காவலர்கள் சரமாரி கேள்விகள் கேட்டு கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

தனி தனி குற்றப்பத்திரிக்கை

இந்த விசாரணையை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வீடியோவில் வரும் மாணவிகளை சூம் (zoom) செய்து, ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்கள் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபால் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், பதிவு செய்து ஒவ்வொரு குற்றப்பத்திரிக்கையாக தாக்கல் செய்ய இருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச தண்டனை

இதன் மூலம் ஆசிரியர் ராஜகோபாலுக்கு அதிகப்படியான தண்டனை பெற்றுத்தர காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இன்று (ஜுன் 4) மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

இன்று ஆஜர்

ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் சிலர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு இன்று காலை 11 மணி அளவில் ஆசிரியர் ராஜகோபால், பத்மசேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவி, முதன்மை கல்வி அலுவலர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பத்மசேஷாத்ரி பாலியல் விவகாரம்: தீப்பொறியான இன்ஸ்டாகிராம் ஷேட்... அப்படி என்னதான் பேசியிருக்கிறார்கள்?

Last Updated : Jun 4, 2021, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details