இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ தமிழ்நாடு மக்களின் முழு முதற்கடவுளான முருகனிடம் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பாலதேவராய சுவாமிகளால் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம், தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்தி பாடலாகும்.
கறுப்பர் கூட்டத்துக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்டனம் - minister sevur ramachandran
சென்னை: கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
karuppar kootam
இப்பாடலில் உச்சி முதல் பாதம்வரை ஒவ்வொன்றாக தியானித்து கவசமாக காக்கப்பட வேண்டுமென முருகப்பெருமானிடம் மனமுருகி முருகனடியார்கள் பாடி இறையருள் பெறுகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தி தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறு அவதூறாக விமர்சனம் செய்த , கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Last Updated : Jul 18, 2020, 11:52 AM IST