சென்னையில் திரு.வி.க நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று(ஆகஸ்ட் 3) பார்வையிட்டார். அங்குள்ள களப்பணியாளர்களுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், 'தொழில்துறை நிறுவனங்கள் 75% பணியாளர்களுடன் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. உணவகங்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவற்றிற்கும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் தொற்றின் வீரியம் குறையும் போது, மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படும்.