தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலில் வார்னிங்…பின்புதான் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - tamilnadu school students

பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் பள்ளி வளாகங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், அதுவும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்குப்பின்னர் தான் வழங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

severe-action-on-students-who-disrespects-teachers
severe-action-on-students-who-disrespects-teachers

By

Published : May 12, 2022, 3:42 PM IST

Updated : May 12, 2022, 4:00 PM IST

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வளர்ந்து வரும் குழந்தைகள், இளம் பெண்களுக்கான கல்வி குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்தப்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி, வளர் இளம் மாணவர்களை எப்படி வளர்த்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், கற்றல் இடைவெளி, ஒழுக்கக்குறைபாடு, மற்றும் சமூக - பொருளாதார பின்னடைவுகள் ஆகியவற்றை போக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் . கரோனாவுக்குப் பின் வகுப்பறைக்கு வரும் மாணவர்களை எப்படி கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களிடம் மாணவர்கள் தவறாக நடந்துகொள்வதை தவிர்க்க, பல்வேறு நிகழ்ச்சிகள், ஆரோக்கியமான போட்டிகள், நன்னெறி வகுப்புகள்,மற்றும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் வரும் கல்வியாண்டிலிருந்து வழங்கப்பட உள்ளது. இதையும் மீறி மாணவர்கள் ஆசிரியர்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் போது தான் மாற்றுச்சான்றிதழ் தரப்படும் என கூறியதாகவும், இது ஏற்கனவே இருக்கக்கூடிய விதிமுறைதான். அவ்வாறு நடக்கும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தர அவர்களின் பெற்றோர்களே சம்மதிக்கின்றனர்.

ஆனால், சில மாவட்டங்களில் தவறாக நடந்துகொண்ட மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் ஏதும் வழங்கப்படாமல் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கைமீறி செல்லும் போது ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஆய்வுக்குப் பின்னர் தான் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், இனி மாணவர்கள் எந்தவித தவறான செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

முதலில் வார்னிங்…பின்புதான் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்காக பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றுவது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் இந்தத் திட்டத்தை படிப்படியாக நீடிக்கப்பப்படும். அரசுப்பள்ளிகள், அங்கன்வாடிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை . எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும்.அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தேர்வுகள் முடிந்த பிறகே தொடங்கும். வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பின் அந்தப் பள்ளியின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் யாராவது இருப்பது குறித்து புகார் வந்தால், எந்த நிறுவனமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: பள்ளிகளின் கவனத்திற்கு... மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்

Last Updated : May 12, 2022, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details