தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் மீண்டும் ஆஜர்! - நடிகர் விஷால்

சென்னை: சரக்கு மற்றும் சேவை வரித்துறை தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நடிகர் விஷால்

By

Published : Oct 11, 2019, 10:52 PM IST

நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் பேக்டரி செலுத்த வேண்டிய சேவை வரி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சரக்கு மற்றும் சேவை வரித்துறை அலுவலர்கள் விஷாலுக்கு சம்மன் அனுப்பினர்.

இந்த சம்மனை ஏற்று ஆஜராகாத விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி ஹெர்மிஸ் முன் விசாரணைக்கு வந்தது.

தற்போது நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார். அப்போது, நீதிபதி வேண்டுமென்றே சம்மனை பெறவில்லையா? வேண்டுமென்றே ஆஜராகாமல் இருந்தீர்களா? என விஷாலிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். அரசுத் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை தான் மறுப்பதாக விஷால் தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி வரும் நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். நடிகர் விஷால் எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் ஆஜரானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:ரஜினி-கமல் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்-விஷால்

ABOUT THE AUTHOR

...view details