சென்னை: பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர், நைனா முகமது. தனது பெயரை அரணவ் என மாற்றிக்கொண்டு பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த இவர் திவ்யா என்ற தொலைக்காட்சி நடிகையை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் அரணவை திவ்யாவும் காதலித்த நிலையில் இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் மட்டுமே தனது வீட்டில் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என்று அப்பெண்ணிடம் கூறியுள்ளார். திவ்யாவும் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளார். இதையடுத்து இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படியும் திவ்யாவை அரணவ் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஐந்து மாதங்களாக திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில் திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார்.
'கரோனா காலகட்டத்தில் வேலையில்லாமல் இருந்த போது தான் வேலைக்குச்சென்று அரணவை பார்த்துக்கொண்டு வீடுகட்ட பணம் கொடுத்தேன். அரணவிற்கு வேறு ஒரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து, எங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டேன். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.