தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகளை சரி செய்ய தனி நிபுணர் குழு : பி.டி.ஆர்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் குளறுபடிகளை சரி செய்ய தனி நிபுணர் குழு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்தார்.

PTR
PTR

By

Published : Apr 12, 2022, 1:42 PM IST

சென்னை: சட்டப் பேரவையில் பேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேல் அரசு காலிப்பணியிடங்கள் உள்ளது.

இதனை சரி செய்யும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எவ்வாறு நடத்துவது, தேர்வுக்கான பயிற்சி எவ்வாறு வழங்குவது, தேர்வு முறையில் உள்ள குளறுபடிகளை எவ்வாறு சரி செய்வது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய தனி நிபுணர் குழுவை, தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும், “இந்த நிபுணர் குழு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், 6 மாத காலத்திற்குள் இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசு தேர்வு முறை மற்றும் அரசு வேலைவாய்ப்பில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டு, அரசுத் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்றும் விளக்கமளித்தார்.

இதையும் படிங்க: காவல்துறைக்கு ரூ.66.48 கோடி மதிப்பீட்டில் கட்டடம் திறப்பு

For All Latest Updates

TAGGED:

Minister PTR

ABOUT THE AUTHOR

...view details