தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு தனி வகுப்பு

சென்னை: மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளிலும் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

By

Published : Nov 19, 2020, 8:39 PM IST

chennai-metro-train
chennai-metro-train

கரோனா ஊடரங்குக்கு பிறகு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கு முன்பு முதல் வகுப்பு தவிர, பிற பெட்டிகளில் அலுவலக நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில், சென்னை மெட்ரோ ரயில்களில் உள்ள அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளிலும் மகளிர் மட்டும் பயணிக்கும் வகையில் பிரத்யேக பெட்டிகளாக மாற்றப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எப்போதும் மகளிர் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கி வருகிறது. பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

chennai-metro-train

இதன் தொடர்ச்சியாக, நவம்பர் 23ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில்களில் அனைத்து முதல் வகுப்பு பெட்டிகளிலும் மகளிர் மட்டும் பயணிக்கும் பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் வசதிக்காக கூடுதல் இருக்கைகள் ஏற்படுத்த முடியும். மேலும், தற்போதுள்ள சாதாரண கட்டணத்திலேயே பயணிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details