சென்னை: எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த அளவு மிரட்டல் என்றால் ஆளும் கட்சியாக வந்தால் என்ன நிலைமையாகும் என்று செந்தில் பாலாஜி பேச்சு குறித்து ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி பேச்சு, திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வி! - Jayakumar
எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இத்தனை மிரட்டல், நீங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வந்தால் என்ன நடக்கும் என்ற தொனியில் திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை ராயபுரம் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளான காமாட்சி அம்மன் கோயில் சோலையப்பன் தெரு கப்பல் போலு தெரு உள்ளிட்ட பகுதிகளில் ரிக்ஷாவை ஓட்டிச் சென்று பொதுமக்களிடம் தனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், “அதிமுக ஆட்சியில் மக்கள் எந்தவித அராஜகம், ரவுடிசம் இன்றி நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போதே டீக்கடை, அழகு நிலையம் உள்ளிட்ட கடைகளில் அராஜகத்தில் ஈடுபடும் காட்சிகள் வைரல் ஆகியுள்ளது. திமுக ஒரு அராஜக கட்சி அவர்கள் எந்த நிலையிலும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவுடன் இருக்கிறார்கள்.