தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெண் எஸ்.பி. கொடுத்த பாலியல் புகார் - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை - hearing

பாலியல் தொந்தரவு குறித்து பெண் எஸ்.பி தொடர்ந்த வழக்கு இன்று (செப்.23) உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

By

Published : Sep 23, 2021, 12:02 PM IST

லஞ்ச ஒழப்புத் துறையின் இணை இயக்குனராக இருந்த முருகன் மீது பெண் காவல் துறை கண்காணிப்பாளர், பாலியல் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தெலங்கானா மாநில காவல் துறை விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை வேறு மாநில விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் குற்றஞ்சாட்டப்பட்ட முருகன் வழக்குத் தொடர்ந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, பெண் காவல் துறை கண்காணிப்பாளர் தனியாக வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், அவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, நீதிபதி ரிஷிகேஷ் ராய் ஆகியோரது அமர்வு முன்பு இன்று (செப்.23) விசாரணைக்கு வரவுள்ளது.

இதையும் படிங்க:பெண் எஸ்பி பாலியல் வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details