தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - ஸ்டாலின் - திருவுருவப் படத்தை திறந்து வைத்த ஸ்டாலின்

சென்னை: கரோனா காலத்தில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

By

Published : Jul 25, 2020, 2:11 PM IST

திமுகவின் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன் ஆகியோரது திருவுருவப் படங்களை காணொலி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், காணொலி வாயிலாக உரை ஆற்றிய ஸ்டாலின், "எந்தச் சூழலிலும் இரவு பகல் பாராமல், வெயில் மழை பாராமல், வெற்றி தோல்வி பாராமல், இவர்கள் எப்படி உழைத்தார்களோ; அத்தகைய தியாகிகளுக்கு நாமும் கரோனா காலம் என்பதை எல்லாம் பாராமல் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

படத்திறப்பு நடத்துவதும், புகழஞ்சலி நடத்துவதும் ஏதோ அவர்களைப் புகழ்வதற்காக மட்டுமல்ல; மறைந்தவர்களுக்கு நாம் செலுத்த வேண்டிய நன்றிக் கடனின் அடையாளம்தான் இத்தகைய நிகழ்ச்சிகள். கே.பி.பி.சாமியை பொறுத்தவரை இன்னமும் அவரது கள்ளமில்லாத சிரிப்பு என் மனக்கண்ணில் இருந்து மறையவில்லை. அவரது உடல்நலனை நான் விசாரிக்கும் போதெல்லாம், தன்னுடைய தொகுதியைப் பற்றித்தான் அவர் அதிகம் கவலைப்பட்டு என்னிடம் பேசினார். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், மீனவர் சமுதாயத்தின் நலன் குறித்து அதிகமாகப் பேசுவார்.

அதேபோல் எளிமையின் இலக்கணமாகத் திகழ்ந்தவர் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.காத்தவராயன் சட்டப்பேரவையில் தனது தொகுதிப் பிரச்னைக்காக வாதங்களை அழகாக எடுத்து வைப்பார். இதனைப் பார்த்த நான் அவரை அருகில் அழைத்துப் பாராட்டினேன். அனைவருக்கும் நான் சொல்வது உடல்நலத்தைப் பேணிக் கொள்ளுங்கள். அதுதான் மிகமிக முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கழகப் பணியும் ஆற்ற முடியும்; மக்கள் சேவையும் ஆற்றமுடியும்.

திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தும் ஸ்டாலின்

அதைவிட முக்கியமாக, உங்கள் குடும்பக் கடமைகள் இருக்கின்றன. இந்த மூன்றுக்காகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். கவனமாக இருங்கள். அதுவும் இது கரோனா காலம். எனவே மூத்த உறுப்பினர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு உடல்நலக் கோளாறு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details