சென்னை பல்கலைக்கழகம் நேற்று (ஆக.30) வெளியிட்ட செய்திக்குறிப்பில்,"6ஆவது செமஸ்டரில் ஒரு தாள் மட்டும் அரியர் வைத்துள்ள இளநிலை மாணவர்களுக்கு உடனடி எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். முதுகலை மாணவர்கள் நான்காவது செமஸ்டர் தேர்வில் ஒரு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கும் உடனடியாக எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு நடைபெறும்.
இவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி மூலமாக செப்.5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் இளநிலை மாணவர்கள் உடனடி தேர்வுக்கான கட்டணமாக 300 ரூபாய் செலுத்தியும், முதுகலை மாணவர்கள் 350 ரூபாயும், M.A M.L., சட்டபடிப்பு மாணவர்கள் 600 ரூபாயும் செலுத்த வேண்டும். சிறப்பு தேர்வு செப்.24ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
B.com, B.B.A மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அடையாற்றில் உள்ள பெட்ரிசியன் கல்லூரியில் நடைபெறும். B.sc, B.A மாணவர்களுக்கு அடையாற்றில் உள்ள குமார ராணி மீனா முத்தையா கல்லூரியில் நடைபெறும். முதுகலை மாணவர்களுக்கான சிறப்பு தேர்வுகள் எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.