புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினராக உள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம், வருகின்ற அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து,புதிய உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கைப்பற்றுவதில் பாஜக, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிரம் காட்டி வந்தார்.
முதலமைச்சர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்ற செல்வகணபதி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற செல்வகணபதி
பாஜகவும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கைப்பற்ற ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில், என்.ஆர்.காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்களுடன் தனியார் விடுதியில் நேற்று (செப் 21) நடைபெற்றது.
இதையடுத்து, நேற்று (செப்.21) மாலை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் நியமன எம்எல்ஏ செல்வகணபதியை டெல்லி பாஜக தலைமை அறிவித்தது.
அறிவிப்பை அடுத்து பாஜக வேட்பாளர் செல்வகணபதிமுதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, வாழ்த்து பெற்றார். வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாளான இன்று (செப்.22) அவர் தனதுவேட்பு மனுவை செய்கிறார்.
இதையும் படிங்க:ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்த பன்னீர் செல்வம்