சென்னை அடுத்த மதுரவாயலில் தமிழ்நாடு அரசு சார்பாக கட்டப்பட்டுள்ள புதிய மத்திய கூட்டுறவு வங்கி கட்டடத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், "2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக, வங்கிகள், கணினிகளை நவீனமயமாக்க எந்தவித நடவடிக்கைகளையும் செய்யவில்லை. தற்போது உள்ள அதிமுக அரசு தான் அதை நிறைவேற்றியுள்ளது.
'நகை கடன் தள்ளுபடி இல்லை' - அமைச்சர் செல்லூர் ராஜு 1930ஆம் ஆண்டு மூன்று கிளைகளோடு குறைந்த இருப்புத்தொகையுடன் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இன்று 69 கிளைகளைக் கொண்டுள்ளது, இதன் மூலமாக 432 பயனாளிகளுக்கு 1 கோடியே 84 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் பேசிய அவர், "தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் நகை கடன் ரத்து செய்யப்படும் என்று கூறி மக்களை ஏமாற்றிவுள்ளார், அவர் தமிழ்நாட்டில் கூறினாரே ஆனால் அதை மத்தியில் கூறினாரா? அதிமுக அரசுக்கு நகை கடனை ரத்து செய்யும் திட்டம் இல்லை மக்கள் வழக்கம்போல வட்டியை கட்டவேண்டும்" என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.