தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை - selam district

நூறுநாள் பணியில் உள்ள வேலையாட்களை விவசாயப் பணிக்கு அனுப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைத்திட்டத்தால் விவசாயம் பாதிப்பு
வேலைத்திட்டத்தால் விவசாயம் பாதிப்பு

By

Published : Oct 18, 2021, 4:33 PM IST

சேலம்:100 நாள் வேலைத்திட்டத்தை 150ஆவது நாளாக ஒன்றிய அரசு உயர்த்தியது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 100 நாள் வேலைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் விவசாயப் பணிக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவித்து வருவதாகப் புகார்கள்
எழுந்தன.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 100 நாள் பணியில் உள்ள வேலை ஆட்களை விவசாயப் பணிக்கு அனுப்ப வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் கரும்பு, மண்வெட்டி உள்ளிட்ட விவசாயப் பொருட்களுடன் கலந்து கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் மாவட்டத்தின் பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பொதுச் செயலாளர் சுந்தரம் கூறுகையில், '100 நாள் வேலைத்திட்டம் என்ற பெயரில் திரளான பெண்கள் பணியாற்ற வருகிறார்கள். ஆனால், ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் என்ற பெயரில் அதிக அளவில் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இதனால் தமிழ்நாடு முழுவதும் விவசாயப் பணிக்கு ஆள்கள் கிடைக்காமல், விவசாயிகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பயிர் நடவு செய்ய முடியாமலும், கரும்பு வெட்டுதல் போன்ற விவசாயக் கூலி வேலைக்கும் ஆட்கள் கிடைக்காமல் திண்டாட்டம் ஏற்பட்டு விவசாயம் அழியும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

எனவே, 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை விவசாயப் பணிக்கு அனுப்பவேண்டும். குறிப்பாக, ஒன்றிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் ஆக உயர்த்தியுள்ளது, வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல உள்ளது' என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:சம்பா பருவப் பயிர்களுக்கு ரூ.1,597 கோடி இழப்பீடு!

ABOUT THE AUTHOR

...view details