தாம்பரத்தை அடுத்த சந்தோஷபுரம் பகுதியில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், வாடகை வீட்டில் தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில், சிவராமன் (28) என்பவர் நேற்று காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு வந்துள்ளார். மற்ற இரண்டு பேரும் மதியம் வேலைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்கள் வந்து பார்க்கும்போது வீடு பூட்டி இருந்தது. வெகுநேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த இருவரும் கதவை உடைத்து பார்த்தபோது சிவராமன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.
சேலையூரில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை! - இளைஞர் தற்கொலை
சென்னை: சேலையூரில் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் வீட்டிற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
suicide
இதையடுத்து, சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு சிவகங்கையில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து சேலையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'நான் கூப்பிடும் போதெல்லாம் வரணும்' - சிறுமியை தொடர்ந்து பாலியல் வல்லுறவு செய்த மாணவன்!