சென்னை:திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் சட்டவிரோதமாக கலப்பட டீசல் விற்பனை செய்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை மண்டல ஆய்வாளரின் தலைமையில் திருச்செங்கோடு சங்ககிரி செல்லும் சாலையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
சோதனை
அப்போது திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையிலுள்ள ஸ்ரீ முருகன் மோட்டார்ஸ் வொர்க்ஸ் பட்டறையில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரியை அலுவலர்கள் சோதனை செய்தனர். சோதனையில் எவ்வித உரிமமும், ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக 4ஆயிரம் லிட்டர் டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து லாரி உரிமையாளர் சேகர், உதவியாளர் மூர்த்தி, கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலர்கள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கலப்பட டீசல் உரிமையாளரான திருச்செங்கோட்டை சேர்ந்த கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:லாரி சக்கரத்தில் சிக்கி உயிர்தப்பிய மூவர் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி