சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்டகாலமாக அரசியலில் உழைத்துள்ள தமிழிசை சவுந்தரராஜனை அங்கீகரித்து ஆளுநராக நியமித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆளுநராக வந்தது மிகவம் மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணத்தின் மூலம் என்ன கொண்டு வருகிறார் என்பதை பார்ப்போம். அது வெற்று பயணமாக அமையதான் அதிக வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டீர்கள் என சுப்பிரமணிய சாமி கூறியுள்ளதைப்பற்றிய சிந்தனையே கிடையாது. இவர்கள் பசு மாடு, ராமர் கோயில், பாகிஸ்தான் போன்ற விவகாரங்களை வைத்து அரசியல் செய்துவிடலாம் என நினைத்து கொண்டுள்ளனர்.