நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வாக்கு இயந்திரத்தில் எங்கள் கட்சியின் சின்னம் சிறியதாக பதியப்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும், உயர் நீதிமன்றத்திடமும் முறையிட்டோம். ஆனால் நேரம் குறைவாக உள்ளதை காரணம் காட்டி எங்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக எடுக்கக்கேரி வழக்கு தாக்கல் செய்தோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மாற்று அரசியலை முன்மொழியும் எனக்கும், பவன் கல்யாணுக்கும் மட்டும்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
வாக்குப்பதிவு எந்திரத்தில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை -சீமான் குற்றச்சாட்டு! இந்தத் தேர்தல் மக்களுக்கான தேர்தல் அல்ல; முதலாளிகளுக்கான தேர்தல். சுயேச்சையால் பிரச்னை இல்லை. அதனால் அவர்கள் கோரிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றி வருகிறது. தேர்தல் ஆணையம் ஒரு நாடகக் கம்பெனி. முதலாளித்துவ பேரத்துக்கு தேர்தல் எதற்கு? இதற்கு இந்தியாவையே டெண்டர் விட வேண்டியது தானே?" என கேள்வி எழுப்பினார்.