மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை ஒட்டி, தி.நகரில் உள்ள இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சசிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலாவை தி.நகர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவை சந்திக்க வந்த சீமான் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில், சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த சீமான் செய்தியாளர்களைச் சந்திக்காமல் கிளம்பிவிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது உடல்நலம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.