தமிழ்நாட்டில் சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரிய வழக்கில், தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் சையது முசாமில் அப்பாஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் 196 வகையான அன்னிய மரங்கள் பரவியிருக்கின்றன. இதில் 23 வகையான மரங்கள் உடனடியாக கவனம் செலுத்தி அகற்றப்பட வேண்டியவை.
200 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள்: முதல்கட்டமாக 700 ஹெக்டேர் பரப்பளவில் மரங்களை அகற்றுவதற்காக 5 கோடியே 35 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உரிய நிதி வழங்கப்படும் என்று நிதித்துறை செயலாளர் தெரிவித்தார். அதனடிப்படையில் ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், தர்மபுரி பகுதிகளில் உள்ள 200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள மரங்களை அகற்றுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.