தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பார்டர் திரைப்படம் தடை கோரி வழக்கு - படக்குழுவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்! - நீதிமன்ற செய்திகள்

நடிகர் அருண் விஜய் நடிக்கும் "பார்டர்" படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு படத்தயாரிப்பாளர், தணிக்கை குழு மற்றும் தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பார்டர் திரைப்படம்
பார்டர் திரைப்படம்

By

Published : Sep 5, 2021, 6:53 AM IST

டோனி சினிமாக்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஒன்றரை கோடி செலவில் தான் "பார்டர்" படத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த தலைப்பை, தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தணிக்கை சான்று பெற்று படத்தை வெளியிட உள்ள நிலையில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் "பார்டர்" என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் விளம்பரத்தை ஆல் இன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே "பார்டர்" என்ற தலைப்பை தான் பதிவு செய்துள்ள நிலையில், அதே தலைப்பில் எடுக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட்டால் தனக்கு பெருத்த இழப்பு ஏற்படும் என்பதால், அதே தலைப்பில் அருண் விஜய் நடித்துள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை 6 ஆவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிராபகரன், மனுவுக்கு ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் ஆகியோர் செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details