ஹைதராபாத்: சிவில் சப்ளை சிஐடி டிஜிபி சுனில் குமார் புதன்கிழமையுடன் (இன்று) ஓய்வு பெறுகிறார்.
தமிழ்நாடு காவல்துறையில் சிவில் சப்ளை டிஜிபியாக இருப்பவர் சுனில் குமார். இவரது பணிக்காலம் இன்றுடன் முடிகிறது. 1961ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிறந்தவர் சுனில் குமார். எம்ஏ, எல்எல்பி பட்டங்களை முடித்துள்ள இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர். இவர், 1988ஆம் ஆண்டு, ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் பணிக்காக நியமிக்கப்பட்டார்.
முதல் முதலாக கூடுதல் எஸ்பியாக வேலூரில் பணியில் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து பல்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றியுள்ளார். இவர், சென்னை போக்குவரத்துப் பிரிவு கூடுதல் கமிஷனராக இருந்தபோது உடலுறுப்பு தானத்திற்காக சென்னையில் பசுமை வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டு மிகுந்த நெரிசலுக்கு மத்தியில் தானம் அளிக்கப்பட்ட உடல் உறுப்பு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டது.
தற்போது சென்னையில் அவரசர ஊர்திகள் போக வழித்தடம் உடனே கிடைப்பதை பார்க்கமுடிகிறது. இதற்கான விதையை அன்றே போட்டவர் சுனில் குமார். சித்தேரி ரயில் விபத்தில் இவர் தாக்கல் செய்த குற்றபத்திரிகை அனைவரையும் திரும்பி பார்க்க வந்தது. முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக இவர் தாக்கல் செய்த குற்றப்பத்திாிகை அமைந்திருந்தது.
இதனால் விபத்துக்குள்ளான ரயிலை ஓட்டிய லோகோ பைலட் செல்போன் பேசியபடி சிக்னலை கவனிக்காமல் ரயிலை இயக்கியதுதான் விபத்துக்கான காரணம் என்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து விமான நிறுவன உரிமையாளரின் மகன் மீதான புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட காரணமாக இருந்தார். வாச்சாத்தியில் பொய்யான புகாரில் சிக்கிய காவல் அலுவலர்களுக்கு உறுதுணையாக நின்று, அவர்கள் குற்றச்சாட்டிலிருந்து விடுபட காரணமாக இருந்தார்.
இவர், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியாற்றியபோது, 25 சதவீதத்துக்கும் அதிகமான தமிழ்நாடு காவல்படையினரைத் தேர்வு செய்து தமிழ்நாடு காவல் துறையில் பெரும்பங்காற்றி இருக்கிறார். திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பணியாற்றியபோது, அங்கு நிலவிய சாதிய பதற்றங்களை நீக்கி அமைதி கொள்ள செய்தார். மேலும், வேலூரில் ஏஎஸ்பி ஆகவும், ராஜபாளையத்தில் ஏஎஸ்பி ஆகவும், திருப்பரங்குன்றத்தில் ஏஎஸ்பியாகவும், கடலூரில் எஸ்பியாகவும், தருமபுரியில் எஸ்பியாகவும், சேலத்தில் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார். இது தவிர இவர் வடமாநிலங்களில் மத்திய அரசின் உளவுதுறையிலும் பணியாற்றியுள்ளார்.
இதையும் படிங்க : திருவனந்தபுரம் ஐபிஎஸ் ஐஸ்வர்யாவுடன் சிறப்பு நேர்க்காணல்!