சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நசீம்பி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில், வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பெட்டிகளின் மீது வைக்கப்படும் முத்திரைகள், வேட்பாளர்களின் முன் அகற்றப்பட வேண்டும் என்பதை மீறி, சில வார்டுகளின் வாக்குப்பெட்டிகளின் முத்திரைகள் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது சம்பந்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நசீம்காத்து என்பவரின் வெற்றியை எதிர்த்து விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பதிவுசெய்யப்பட்ட காணொலிக் காட்சிகளையும், கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.