நாளுக்கு நாள் சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்திலும் இன்று கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
அண்மையில் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்ட தலைமைச் செயலகம்! அதன்படி, தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள, உயர் அரசு அலுவலர் அறைகள், செயலாளர் அறைகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கழிவறைகள், மின்தூக்கி ஆகிய இடங்களும் சுத்தம் செய்யப்பட்டன. அப்போது காவல் துறையினரும் உடனிருந்தனர். தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை அலுவலர்களுக்கும் கரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்!