தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2 ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

சென்னை: இரண்டாம் கட்ட மருத்துவப்படிப்பு கலந்தாய்வு அட்டவணையை மருத்துவ கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

counselling
counselling

By

Published : Jan 1, 2021, 1:03 PM IST

கடந்த மாதம் நடந்த மருத்துவப் படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு சில நாட்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு அட்டவணையை மாணவர் சேர்க்கை செயலாளர் செல்வராஜன் வெளியிட்டுள்ளார். அதன்படி, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், ஏற்கனவே சேர்ந்த கல்லூரியை விரும்பாத மாணவர்கள் பங்கேற்று மறு ஒதுக்கீட்டு ஆணையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் 4 ஆம் தேதி ஒரே நாளில் மூன்று சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது. ஏற்கனவே தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

அதேபோன்று, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்பில் அகில இந்திய தொகுப்பிலிருந்து 148 இடங்கள் தமிழகத்திற்கு திருப்பித் தரப்பட்டுள்ளன. இதில் 12 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். 136 எம்பிபிஎஸ் இடங்கள் மற்ற பிரிவினருக்கு வழங்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 46 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. இந்த இடங்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களில், 76 பேர் கல்லூரிகளில் சேரவில்லை. இந்த 76 இடங்களையும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 258 எம்பிபிஎஸ் இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.

இதையும் படிங்க: சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடத்தக்கோரி, முதலமைச்சருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details