தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தடுப்பூசி செலுத்தினால் விமானத்தில் அனுமதி - flights travel

சென்னையிலிருந்து கேரளா, மகாராஷ்டிரா செல்லும் விமானப் பயணிகளுக்கு, தடுப்பூசி செலுத்தினால் ஆர்டிபிசிஆர் நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை என்று விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானப்பயணிகள்
விமானப்பயணிகள்

By

Published : Jul 22, 2021, 7:40 PM IST

சென்னை: இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர்கள், "சென்னையிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே, அவுரங்காபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்களில் பயணிப்பவர்கள் ஆர்டி பிசிஆர் நெகடிவ் சான்றிதழ் தேவையில்லை கொண்டுவரத் தேவையில்லை.

கரோனா தொற்று தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியதற்கான சான்றிதழ்கள் இருந்தாலே பயணிக்கலாம். ஆனால், இரண்டு டோஸ்களை செலுத்திக்கொள்ளாதவர்கள் பயண நேரத்திலிருந்து 72 மணிக்குள் எடுக்கப்பட்ட ஆர்டி பிசிஆர் நெகடிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர். இந்த அறிவிப்பு போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி வெளியிடப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:பாரீஸ் முதல் சென்னை: புதிய விமான சேவை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details