தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவிற்காக மருத்துவப்பல்கலைக்கழகத்தில் இருக்கை!

மருத்துவத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவிற்காக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சண்முகசுந்தரம் இருக்கையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கவுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 9, 2022, 2:59 PM IST

சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இன்று (அக்.9) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மருத்துவம் மற்றும் சார் மருத்துவத்துறைகளின் கல்வித்தரம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு ஆகியவற்றை உயர்த்துவதில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உறுதியுடன் செயல்படுகிறது.

இந்த வகையில், பல்கலைக்கழக வல்லுநர் குழுவின் பரிந்துரையின்படி பல்கலைக்கழகச் சிறப்பு இருக்கைகள் தோற்றுவிக்கப்பட உள்ளன. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதல் சிறப்பு இருக்கையாக சண்முகசுந்தரம் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவத்தில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்பதற்கான இருக்கையாக இது இருக்கும். சண்முகசுந்தரம் இருக்கைக்கு நியமிக்கப்படுகிற பேராசிரியர், ஆண்டுக்கு ஒரு முறை பல்கலைக்கழகத்திலும், இணைப்புக் கல்லூரிகளிலும் மருத்துவச்செயல்பாடுகளில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்து ஏற்பட்டுள்ள மேம்பாடுகளை மாணவர்களுக்கு விரித்துரைப்பார்.

நடைமுறை வகுப்புகளையும், பயிலரங்கங்களையும் நடத்துவார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மதியம் 12.30 மணிக்கு, பல்கலைக்கழக வெள்ளிவிழாக் கலையரங்கில் டாக்டர் சண்முகசுந்தரம் இருக்கையினைத் தொடங்கி வைக்கிறார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மயிலையில் சாலையோர கடைகளில் சாதாரணமாக காய்கறி வாங்கிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details