சென்னை:மெரினா கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த சிறுமி ஒருவர் மூழ்கி காணாமல் போனதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேரில் சென்று விசாரித்தபோது, அச்சிறுமி ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 10 வயதான வைஷ்ணவி என்பது தெரியவந்துள்ளது.
மெரினா கடலில் மூழ்கிய 10 வயது ஆந்திரா சிறுமியைத் தேடும் பணி தீவிரம் - மெரினா கடலில் மூழ்கிய சிறுமி
சென்னை மெரினா கடலில் மூழ்கிய ஆந்திர மாநில சிறுமியை மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆந்திரா சிறுமியை தேடும் பணி தீவிரம்
இந்த நிலையில் காணாமல் போன சிறுமி வைஷ்ணவியை மெரினா கடற்கரை மீட்புப்படையினரும் , காவல் துறையினரும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு