தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் கடும் கடல் சீற்றம்! - மரினாவில் கடல் சீற்றம்

சென்னை: புயல் நெருங்குவதையொட்டி மெரினா, காசிமேடு, பெசண்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்படுகின்றன.

sea
sea

By

Published : Nov 24, 2020, 5:25 PM IST

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ’நிவர்’ புயலாக இன்று காலை மாறியது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதி தீவிர புயலாக நிவர் மாறி, கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால், கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

மெரினா கடற்கரையில் இயல்பை விட பெரிய அலைகள் எழுகின்றன. கிட்டத்தட்ட 2 மீட்டர் அளவிற்கு அலை எழுவதால், கடலோரத்தில் வசிக்கும் மீனவர்கள் தங்களது படகுகளை கரையிலிருந்து வெகு தூரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

சென்னையில் கடும் கடல் சீற்றம்!

இந்நிலையில், மெரினா கடற்கரைக்கு இன்று காலை மக்கள் அதிகளவில் வந்தனர். ஏற்கனவே கரோனா பரவல் காரணமாக கடற்கரைக்கு வர தடை உள்ள நிலையிலும், புகைப்படம் எடுப்பதற்காகவும், கடல் சீற்றத்தைக் காணவும் அதனை வீடியோ எடுக்கவும் அவர்கள் வந்ததாக தெரிவித்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி கடற்கரைக்கு பலர் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம்' - காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால்

ABOUT THE AUTHOR

...view details