சென்னை: ரிக் கிரியேஷன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேமாவதி ரவிசங்கர் தயாரிக்கும் முதல் படம் ’ஓட்டம்’. மர்மங்களும் திகிலும் நிறைந்த இந்த படத்தில் இசையமைத்து கதாநாயகனாக அறிமுகமாகிறார், எஸ்.பிரதீப் வர்மா. இவருடன் ஐஸ்வர்யா சிந்தோஹி, அனுஸ்ரேயா கதாநாயகிகளாக அறிமுகமாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.
இக்கதையில், காதலித்து கல்யாணம் செய்த மனைவி ஒரு பக்கம் இருக்க, தன்னைக் காப்பாற்றச்சொல்லி தஞ்சமடைந்த ஒரு பெண் மறுபக்கம் இருக்க, இருவரிடமும் மாட்டிக்கொண்டு தவிக்கும் கதாநாயகனின் நிலையை நகைச்சுவையாகவும் திகிலாகவும் கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பில் நிஜமாகவே ஒரு திகில் சம்பவம் நடந்து படக்குழுவினரை அலற வைத்துள்ளது. ஒரு நாள் இரவு காட்டுப்பகுதியில் கதாநாயகி ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட திகில் காட்சி படமாக்கப்பட்ட போது, அவுட்டோர் யூனிட் விளக்குகள் ஒரு நிமிடம் அணைந்து அணைந்து எரிந்துள்ளது.