சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்காகத் தனித்துவமான வாகனத்தை சென்னையைச் சேர்ந்த யாளி மொபிலிட்டி ஸ்டார்ட்அப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மாற்றுத்தினாளிகளுக்காக வடிவமைக்கப்படும் மூன்று சக்கர வாகனத்துக்கு மாற்றாக மோட்டார் சைக்கிள் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சாதாரணமாக பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களையே, மூன்று சக்கர வாகனங்களாக மாற்றி அவர்களுக்கு பாதுகாப்பைத்தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை ஐஐடியின் ஆராய்ச்சித்துறையில் மூன்று சக்கரத்துடன் கூடிய மாற்றுத்திறனாளியே பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிமைத்தனர்.
ஆனால், மூன்று சக்கர பேட்டரி வண்டியில் செல்லும் மாற்றுத்திறனாளிகளும் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றில் மற்றவர்களின் துணையுடன் தான் ஏறி பயணிக்க வேண்டியதிருந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு எதிர்கொள்ளும் இந்தச் சிக்கலை மனத்தில் கொண்டு யாளி மாெபைலிட்டி ஸ்டார்ட் அப் நிறுவனம், தங்களது புதிய வடிவமைப்பு முயற்சியைத் தொடங்கியது.
மாற்றித்திறனாளிகள் சக்கர நாற்காலியோடு யாருடைய உதவியும் இல்லாமல், அப்படியே இந்த வாகனத்தில் ஏறிக் கொள்ள முடியும். சக்கர நாற்காலியை அப்படியே மூன்று சக்கர வாகன அமைப்புடன் பொருத்திக்கொள்ளலாம். இதற்கு வேறு யாரின் உதவியும் தேவை இல்லை. வாகனத்தின் உள்ளே அமர்ந்தபடி இயக்கவும் முடியும்.