சென்னை: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சந்தித்தார்.
முதலமைச்சரை சந்தித்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை - Scientist Mayilsamy Annadurai met CM MK Stalin
கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளை அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக ஈடுசெய்வது குறித்து திட்டம் தயாரிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியதாக விஞ்ஞானி மயில்சாமி தெரிவித்துள்ளார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கல்வி, தொழில், வேலைவாய்ப்பு என பல துறைகளும் கரோனா ஊரடங்களால் பின்னடவை சந்தித்துள்ளது. இதை சரிசெய்வதற்கான அறிவியல் தொழில்நுட்ப சார்ந்த திட்டத்தை வகுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்“ என்றார்.
மேலும், இது தொடர்பாக குறிப்பாகக் கல்வியை பொறுத்தரை வகுப்புகள் மாறினாலும் அனைத்து பாடங்களையும் கற்று இருப்பார்கள் என்று சொல்லமுடியாது எனவும், அனைவருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.