மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்கும், "விஞ்ஞான் பிரச்சார்" எளிய ஆங்கில மொழியில் ஏராளமான அறிவியல் புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
சென்னை 44ஆவது புத்தகக் காட்சியில் அரங்கு எண் 185இல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கின்றன. "விஞ்ஞான் பிரச்சார்" தமிழ் பிரிவான அறிவியல் பலகையின் சார்பில் "ட்ரூடான்" தமிழ்ப் புத்தகம் இந்தப் புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகத்தில் தமிழ்நாட்டில் அரியலூரில் வாழ்ந்ததாகக் கருதப்படும் டைனோசர்களின் வாழ்க்கை பற்றிய ஏராளமான தகவல்கள் அழகிய தமிழில், அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது.