சென்னை:தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 21) துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
செப்டம்பரில் பள்ளிகள் திறப்பது உறுதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
13:27 August 21
செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழ்நாட்டில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசக்கப்பட்டது.
முன்னதாக வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். கரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள்
- அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கை கழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
- கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி கிடையாது.
- மாணவர்களுக்கு ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும்.
- கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
- 50 விழுக்காடு மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி.
- பள்ளி வளாகத்தை சுத்தமாக இருப்பதை பள்ளி நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்.
- பள்ளிகளில் உள்ள மேஜைகள், உணவகம், கழிவறைகள், வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
- பள்ளி வாகனங்கள் கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- மாணவர்களின் இருக்கைக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
- பள்ளியின் அனைத்து பகுதிகளிலும் தகுந்த இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- பள்ளிகளில் விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது.
இதையும் படிங்க:கடுமையாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - முதலமைச்சர் ஆலோசனை