தமிழ்நாடு

tamil nadu

'பள்ளிகளைத் திறக்க தயாராகி வருகிறோம்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: சுகாதாரத்துறை தமிழ்நாடு முதலமைச்சரிடம் கூறிய ஆலோசனையின்படி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

By

Published : Aug 11, 2021, 1:54 PM IST

Published : Aug 11, 2021, 1:54 PM IST

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆகஸ்ட் 27ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ளது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் படித்த இரண்டு லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். அந்த மாணவர்கள் இடை நிற்காமல் அரசு பள்ளிகளில் தொடர்ந்து கல்வி பயில சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

பெரும்பான்மையான ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போடதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுரை வழங்குகிறது" என்றார்.

பள்ளிகள் திறப்பு எப்போது?

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என சுகாதாரத்துறை தமிழ்நாடு முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் பள்ளிகளைத் திறக்க பள்ளிக்கல்வித்துறை தயாராகி வருகிறது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

14 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டால், மாணவர்களை சுழற்சி முறையில் வரவைத்து பாடம் நடத்தவும், அவர்களுக்கு பள்ளி இல்லாத அன்று கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஓபிஎஸ், இபிஎஸ்ஸை தனித்தனியே சந்தித்த எஸ்.பி. வேலுமணி!

ABOUT THE AUTHOR

...view details