சென்னை:தீபாவளி பண்டிகை நாளை(நவ.4) கொண்டாப்படுகிறது. இதனிடையே, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் நவம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை வைத்தன. அதன்படி தமிழ்நாடு முழுவதும் தீபாவளிக்கு மறுநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளியை தொடர்ந்து 5ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், 6ஆம் தேதியும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.