தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - பள்ளிகள் திறப்பு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

By

Published : Aug 6, 2021, 8:23 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 6) தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அப்போது, மருத்துவ நிபுணர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான மாணவர்களுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

பள்ளிகள் திறப்பு

அனைத்துத் தரப்பு கருத்துகளையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன், கரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!

ABOUT THE AUTHOR

...view details