தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலாண்டு விடுமுறைக்கு பிறகு திறக்கப்படுகின்றனவா பள்ளிகள்? - school reopen

சென்னை: காலாண்டு விடுமுறை முடிந்ததும் முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதும் 10, 11 ,12ஆம் வகுப்புகளை துவக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

school
school

By

Published : Sep 22, 2020, 12:06 PM IST

Updated : Sep 22, 2020, 1:10 PM IST

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும், பள்ளி, கல்லூரிகளுக்கு, மார்ச் முதல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை, மாணவர்கள் பெற்றோர்கள் அனுமதியுடன் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பாடம் தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு பள்ளிகளுக்கு வரலாம் என மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியது.

அதன்படி, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா, அசாம், கோவா, பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டிலும் பள்ளிகளை திறப்பது குறித்து, பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டுவருகின்றனர்.

அந்த வகையில் காலாண்டு விடுமுறை முடிந்ததும், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்டு, பள்ளி திறப்புக்கான தேதியை முடிவு செய்ய அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்கட்டமாக அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி முடிந்ததும் பள்ளிகளை திறந்து, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Sep 22, 2020, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details