தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளி மாணவர்களுக்கு கரோனா : தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடல் - Schools closing

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களிடையே கரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுவருகின்றன

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Sep 21, 2021, 8:14 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரவல் தொற்று குறைந்துவருவதைத் தொடர்ந்து செப்.1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் பள்ளிகள் திறக்கப்பட்ட 20 நாட்களில் 150க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பத்தூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் மாணவர்களிடையே கரோனா பரவிவருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மேல்நிலைப்பள்ளியிலும் 3 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே அடுத்தமாகம் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேருக்கு திடீர் காய்ச்சல்

ABOUT THE AUTHOR

...view details