சென்னை: வடகிழக்குப் பருவமழை சென்னையில் தொடர்ந்து பெய்ததால், பல்வேறு இடங்களில் நீர் தேங்கியது. மழையின் காரணமாக பள்ளிகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நீர் தேங்கியிருந்ததால் அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் சென்னையில் நீர் தேங்கியுள்ள 10 பள்ளிகள் தவிர, மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கவும் தொடங்கியுள்ளன.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி சென்னை நந்தனத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், பள்ளியில் செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் இந்தப் பள்ளியில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் கண்ணகி நகர்ப் பகுதிக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்துள்ளதால், அங்கிருந்து வருவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் நடக்கும் புதுப்பிக்கும் பணியையும் ஆய்வு செய்தார்.