தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை

பல்லாவரம் அருகே சரியாகப் படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி துப்பட்டாவால் தன் கழுத்தை தானே இறுக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை
ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை

By

Published : Sep 23, 2022, 3:16 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் நேரு நகரைச்சேர்ந்தவர்கள் மோசஸ், லதா தம்பதி இவர்களுக்கு ஹரிணி(14) என்ற மகள் உள்ளார். இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக இவர் பள்ளி பாடங்களை ஒழுங்காக படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனை அவரது ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஹரிணி கடந்த சில தினங்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி ஹரிணி நேற்று(செப்.22) வீட்டில் அனைவரும் அவரவர் வேலைக்குச்செல்லும் வரை பள்ளிக்குத் தயாராவது போல் ரெடியாகி கொண்டிருந்தவர், வீட்டில் அனைவரும் அவரவர் பணிக்கு கிளம்பியவுடன் தனது துப்பட்டாவால் தன் கழுத்தை தானே இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மாணவி ஹரிணி துப்பட்டாவால் தன்னைத்தானே கழுத்தை இறுக்கி, இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்த மாணவி ஹரிணி உடலை மீட்டு அதனை உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல

இதையும் படிங்க:அசாமில் மகள் இறந்த வழக்கில் தந்தை உட்பட 5 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details