தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கிடுக்கிப்பிடி! - school teacher general transfer counselling policy

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணியில் இனிமேல் நியமனம் செய்யப்படுபவர்கள், எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்குக் கட்டாய பணியிடமாறுதல் வழங்கப்படும் எனவும், புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், அதிக காலி பணியிடங்கள் உள்ளது எனக் கண்டறியப்படும் மாவட்டங்களில் ஐந்தாண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு 2021-22, school teacher general transfer counselling policy, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் கொள்கை, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம்,  Directorate of School Education
Directorate of School Education

By

Published : Dec 18, 2021, 8:24 AM IST

Updated : Dec 18, 2021, 9:33 AM IST

சென்னை:பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வின் கொள்கையை வெளியிட்டுள்ளார். அதில், "அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போது மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

காலிப்பணியிடங்களை நிர்ணயம் செய்தல்

பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆசிரியர்கள் - மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள தகவலின் அடிப்படையிலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதிக ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.

புதிய ஆசிரியர்களுக்கான நடைமுறை

பொது மாறுதல் கலந்தாய்வில் 100 விழுக்காடு பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியர்கள், 40 விழுக்காடு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆசிரியர்கள், டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கலாம்.

விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம். இனிமேல் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் எட்டாண்டுகள் கட்டாயம் ஒரு இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். நிர்வாக மாறுதல் போடுவதற்கு அந்தத் துறை அலுவலர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

அலகு விட்டு அலகு மாறுதல் ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்குரிய தடையின்மைச் சான்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் முன்னுரிமை கல்வி ஒன்றியங்களில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர், மூன்றாண்டுகள் வேறு கல்வி ஒன்றியங்களில் பணி புரியலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சுதந்திரப் போராட்டத்தில் வாஞ்சிநாதனின் பங்கு

Last Updated : Dec 18, 2021, 9:33 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details