சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீவந்த் அருண். இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
பள்ளி மாணவன் கோயம்பேடு மெட்ரோவில் தற்கொலை! - கோயம்பேடு மெட்ரோ
சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் முதல் தளத்தில் இருந்து 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டது, அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்த அவர், முதலாவது நடைமேடை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது யாரும் பார்க்காத நேரம் பார்த்து திடீரென்று, கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீவந்தை அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவனையில் அவர் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஸ்ரீவந்தின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக சிஎம்பிடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மாணவன் தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.